தரகம்பட்டியில் பாஜக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பங்கேற்று, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், கடவூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய பகுதி. இந்த பகுதியில் தொழிற்சாலை, விவசாயம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகவில்லை. சுகாதாரம் இல்லாததால்தான் டெங்கு காய்ச்சல் வருகிறது. இதனால் கடவூர் ஒன்றிய பகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்த வேண்டும். பாஜக ஆட்சியில் மத்திய அரசு பணிக்கு வருவோர் ஒரு பைசா லஞ்சம் கூட கொடுக்காமல் வருகிறார்கள்.
ஆனால் மாநில அரசு பணிக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றார். இதில் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கைலாசம், செயலாளர் நவீன்குமார், பரணிதரன், துணைத்தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.