சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் சுப்ரமணியன்சுவாமி உருவப்படத்தை எரித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:20 am IST

கரூரில் சுப்ரமணியன்சுவாமி உருவப்படத்தை எரித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் அவதூறு பேசியதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியைக் கண்டித்து, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர், மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்திற்கு, கொங்கு இளைஞர் பேரவையின் மாவட்டத் தலைவர் அருள்குமார் தலைமை வகித்தார். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டத் தலைவர் சாதிக் முன்னிலை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில், சுப்ரமணியன்சுவாமியின் உருவப்படத்தை எரித்து கண்டனக்குரல் எழுப்பினர். இதில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சிவசாமி, ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.