இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பழுதாகி நின்ற லாரி மீது  எதிரே வந்த லாரி மோதல்: ஓட்டுநர் சாவு

ஏமூர் அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியதில், லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Updated On :5 ஏப்ரல் 2018, 9:21 am IST

ஏமூர் அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியதில், லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
கடலூர் மாவட்டம் சேத்தியார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(55). லாரி ஓட்டுநர். இவர் செவ்வாய்க்கிழமை தனது லாரியில் கரூரை அடுத்த ஏமூர் அருகே வந்துகொண்டிருந்தபோது பழுதானதால் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு லாரி முன்புறம் நின்றுகொண்டிருந்தார். 
அப்போது அவ்வழியே திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரகாஷ் ஓட்டிவந்த டாரஸ் லாரி,  ஜெயச்சந்திரன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீஸார் பிரகாஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.