மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

பணிபுரியும் இடங்களில் பெண் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கரூரில் ஞாயிற்றுக்கிழமை

Updated On :9 ஏப்ரல் 2018, 2:55 am

பணிபுரியும் இடங்களில் பெண் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூரில் மாவட்டத் தலைவர் பெ.ரகுபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநாட்டுச் செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்றார்.  
மாவட்டச் செயலாளர் பா.பெரியசாமி மாநாட்டு அறிக்கை  வாசித்தார். முன்னாள் மாநில பொருளாளர் பெ. இராமசாமி இயக்க கொடியேற்றினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன் தேசியக்கொடியேற்றினார். தமிழகத்தில் தொடர்ந்து நீண்ட காலமாக போராடிவரும் பகுதிநேர ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பை நிவர்த்தி செய்திட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான  பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் வழங்கிட வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை பெண் ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.