கரூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அடுத்த கீரனூரைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி அழகேசன்(40). இவரது மனைவி மணி(37). இவருக்கு கடந்த திங்கள்கிழமை (ஜூலை 30) நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, உடனடியாக இருதய அறுவசை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், முன்பணமாக ரூ.1.50 லட்சம் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியதையடுத்து, பணம் கட்டியுள்ளனர்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை பிற்பகலில் மணி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற நகர காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நலமுடன் இருந்த மணி இறந்ததால், சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், கட்டிய தொகை ரூ.1.50 லட்சத்தை கொடுத்தால் சடலத்தை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்ததை ஏற்ற மருத்துவமனை நிர்வாகம் பணத்தை திருப்பிக் கொடுத்தது. இதையடுத்து மணியின் சடலத்தை வாங்கிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








