மாநில திறனறிதல் போட்டியில் சிறப்பிடம் பிடித்த வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அண்மையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தனித்திறனை அறியும் வகையில் நடனம் , யோகா, கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தனர்.
தமிழ் கட்டுரைப் போட்டியில் மாணவி எஸ்.யோகேஸ்வரி இரண்டாம் பரிசையும், ஆங்கில கட்டுரைப் போட்டியில் கே.சந்தோஷ்குமார் முதல் பரிசு பெற்றனர். மேலும் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். மாநில அளவில் இரண்டாமிடத்தை பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவர் பி.எம்.கருப்பண்ணன், தாளாளர் பி.எம்.கே.பாண்டியன், நிர்வாகி பி.எம்.கே.பெரியசாமி, ஆலோசகர் பி.செல்வதுரை, முதல்வர் வி.பழனியப்பன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






