மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

பெரியாரின் 45 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி,  கரூரிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல்

Updated On :25 டிசம்பர் 2018, 9:20 am IST

பெரியாரின் 45 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி,  கரூரிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர்  திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்ட  திமுக சார்பில்,  திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு நகரச் செயலர் எஸ்.பி.கனகராஜ்  தலைமையில், வழக்குரைஞர் மணிராஜ், சுப.ராஜகோபால் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில், மாநில சட்டத்துறை துணைத்தலைவர் வழக்குரைஞர் மு.க.ராஜசேகரன் , பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, மாவட்டச் செயலர் காளிமுத்து உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
 கரூர் லைட்ஹவுஸ் கார்னரிலுள்ள பெரியார் சிலைக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் அகரமுத்து, மாவட்டச் செய்தித்தொடர்பாளர் இளங்கோ, தொண்டரணி அமைப்பாளர் வழக்குரைஞர் மன்னன், நகரச் செயலர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.