பெரியாரின் 45 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, கரூரிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்ட திமுக சார்பில், திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு நகரச் செயலர் எஸ்.பி.கனகராஜ் தலைமையில், வழக்குரைஞர் மணிராஜ், சுப.ராஜகோபால் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில், மாநில சட்டத்துறை துணைத்தலைவர் வழக்குரைஞர் மு.க.ராஜசேகரன் , பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, மாவட்டச் செயலர் காளிமுத்து உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கரூர் லைட்ஹவுஸ் கார்னரிலுள்ள பெரியார் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் அகரமுத்து, மாவட்டச் செய்தித்தொடர்பாளர் இளங்கோ, தொண்டரணி அமைப்பாளர் வழக்குரைஞர் மன்னன், நகரச் செயலர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்

பட்டியல் பிரிவு ஆணையம் முன் மத்திய இணையமைச்சா் ஆஜா்

சத்தியமங்கலம் அருகே பலத்த காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


