கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புகழூரில் டி.என்.பி.எல் சார்பில் நலத்திட்ட உதவிகள்

கரூர் மாவட்டம், புகழூரில் டிஎன்பிஎல் சார்பில் ரூ.1.9 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. 

News image
Updated On :9 ஜூலை 2018, 2:49 am

DIN

கரூர் மாவட்டம், புகழூரில் டிஎன்பிஎல் சார்பில் ரூ.1.9 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. 
புகழூரில் ஞாயிற்றுக்கிழமை மக்களவை துணை தலைவர் மு. தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் புகழூரில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினர். 
மேலும், மூலிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடங்கள், சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி, கரூர் மாவட்ட விளையாட்டரங்க  மின்விளக்குகள் சீரமைப்புக்கு ரூ.75,000 நிதி, நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் சபா ஆராதனை ரூ.25,000 நிதி, அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடத்த ரூ.50,000 என மொத்தம் ரூ.1.9 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். 
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ்,  காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) பா.பட்டாபிராமன், 
செயல் இயக்குநர் (இயக்கம்) எஸ்.வி.ஆர்.கிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர்.காளியப்பன், எஸ்.திருவிகா,  மார்க்கண்டேயன், நெடுஞ்செழியன், கமலக்கண்ணன், விசிகே.ஜெயராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
புதியபேருந்து வழித்தடம் துவக்கம்... கரூரில் புதிய பேருந்து வழித்தட துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கரூர் பேருந்துநிலையத்தில் நடைபெற்ற விழாவில் திருச்சியிலிருந்து  கரூர், காங்கயம் வழியாக திருப்பூர் வரை செல்லும் பேருந்து, திருச்சியிலிருந்து  கரூர், காங்கயம், பல்லடம் வழியாக கோயமுத்தூர் வரை செல்லும் 2 பேருந்துகள் ஆகியவற்றை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.