கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உற்ஸவத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக சிவன் நடத்திய விளையாட்டால் உண்டான தலம் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம். இக்கோயிலில் சிவபெருமான் அலங்காரவல்லி, செளந்திரநாயகியுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஆண்டுதோறும் நடைபெறும் இக்கோயிலின் பங்குனித் திருவிழா நிகழாண்டில் கடந்த 22 ஆம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 11.30 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 23 ஆம் தேதி நந்தி, அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், 24 ஆம் தேதி பூத, பூதகி வாகனத்திலும், 25 ஆம் தேதி ரிஷிப, ரிஷ்ப வாகனத்திலும், 26 ஆம் தேதி கயிலாய வாகனத்தில் திருவீதி உலா வருகை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதையடுத்து புதன்கிழமை திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அலங்காரவல்லி, செளந்திரநாயகியுடன் வீற்றிருந்த பசுபதீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அலங்காரவல்லி, செளந்திரநாயகி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு புஷ்ப விமானக்காட்சி நடைபெற்றது. இதையடுத்து வியாழக்கிழமை (29 ஆம் தேதி) குதிரை வாகனத்தில் சுவாமிகள் திருவீதி உலா வருதல் மற்றும் பல்லக்கில் திருவீதி உலாவருதல் நிகழ்ச்சியும், 30 ஆம் தேதி காலை 7 மணி முதல் 8.15 மணிக்குள் தேரோட்டமும், அன்று மாலை 6 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 31 ஆம் தேதி நடராஜ மூர்த்திக்கு அபிஷேக தரிஷனம் மற்றும் ஏப்.1 ஆம் தேதி விடையாற்றி உற்ஸவம், 2 ஆம் தேதி ஊஞ்சல் உற்ஸவம், 3 ஆம் தேதி சண்டிகேஸ்வரர் திருவீதி உலா வருதலுடன் விழா முடிவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

