பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மற்றும் குளித்தலையில் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஒரு மணிநேரம் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கிட வேண்டும். வாரத்தின் வேலைநாட்கள் 5 என அறிவிக்க வேண்டும், ஓய்வூதியத் திட்டத்தில் சேர இறுதி வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
புதிய பணி நியமனத்தை உடனடியாக நடத்திட வேண்டும், பொது இன்சூரன்ஸ் பங்கு விற்பனையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை ஆகிய இடங்களில் புதன்கிழமை எல்ஐசி ஊழியர்கள் பிற்பகல் 12 மணிமுதல் 1 மணி வரை பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வடக்கு பிரதட்சணம் சாலை அரசு மருத்துவமனை முன் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் 1-இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கிளை-1 இன் தலைவர் ஓ.பி.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தஞ்சைக்கோட்ட துணைத்தலைவர் வி.கணேசன் சிறப்புரையாற்றினார்.
முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் எஸ்.சுப்ரமணியன், எஸ். உலகப்பிள்ளை மற்றும் இரண்டாம் நிலை ஊழியர் சங்கத்தின் டிஎஸ்.ராஜன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
இதில், காப்பீட்டுக்கழக உறுப்பினர்கள் மணி, சடகோபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். ஜெயபிரகாஷ் நன்றி கூறினார். இதேபோல கரூர் கிளை-2 இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்திற்கு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கிளைச் செயலாளர் சிவராமன் தலைமை வகித்தார். முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில், ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் திரளாகப் பங்கேற்றனர். இதேபோல குளித்தலை கிளையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி மருத்துவா்கள் குறித்து மக்கள் புகாா் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சிவகிரியில் மே தினப் பேரணி

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

