தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு, கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் கரூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் குளித்தலை சார்பு நீதிமன்றங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், கரூர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 433 பேரும், குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் பணியாற்றும் 150 பேரும் புதன்கிழமை வாக்களித்தனர். விடியோ பதிவுடன் நடைபெற்ற இந்தத் தேர்தலில் வழக்குரைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதுதொடர்பாக வழக்குரைஞர்கள் மேலும் கூறியது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான 25 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 53,000 வழக்குரைஞர்கள் வாக்களிக்கிறார்கள். மொத்தம் 192 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார்கள். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள், பின்னர் அவர்கள் தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்வார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

