/

பரணி பார்க் பள்ளியில் மாதிரி தேசிய திறனறிதல் தேர்வு

கரூர் பரணி பார்க் கல்வி வளாகத்தில் மாதிரி தேசிய திறனறிதல் தேர்வு மற்றும் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :5 நவம்பர் 2018, 8:45 am IST

கரூர் பரணி பார்க் கல்வி வளாகத்தில் மாதிரி தேசிய திறனறிதல் தேர்வு மற்றும் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. 
மத்திய அரசு ஆண்டுதோறும் நாடு தழுவிய அளவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக தேசிய திறனறிதல் தேர்வை நடத்துகிறது. இதில் தேசிய அளவில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பிளஸ்-1 வகுப்பில் தொடங்கி ஆராய்ச்சி படிப்பு வரையிலான கல்வி பயிலும் காலம் முழுமைக்கும் மத்திய அரசு மாதந்தோறும் மெரிட்  கல்வி உதவித்தொகை வழங்கி கெளரவிக்கிறது. 
தேசிய திறனறிதல் தேர்வின் முதல் நிலையை அந்தந்த மாநில கல்வித் துறையும், இறுதி தேர்வை மத்திய கல்வித் துறையும் நடத்துகிறது. 
இதற்காக பரணி பார்க் கல்வி குழுமம் சார்பில், முன்னணி போட்டித் தேர்வு பயிற்சி மையமான குரோத் அகாதெமி, அனுபவம் வாய்ந்த ஆந்திர மாநில பயிற்சியாளர்கள் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து பெறப்பட்ட பயிற்சிப் பாடங்கள் துணையுடன் பரணி பார்க், பரணி வித்யாலயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் கடந்த ஒரு ஆண்டாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
இறுதி மற்றும் 10 ஆவது மாதிரி தேர்வு, கருத்தரங்கம் சனிக்கிழமை பரணி கல்வி வளாகத்தில் நடைபெற்றது. 
தேசிய அளவிலான போட்டித் தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறைகளை  "குரோத் அகாதெமி' பயிற்சி மைய இயக்குநர் பேராசிரியை கவிதா மற்றும் ஆந்திர மாநில சிறப்பு பயிற்சியாளர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் விளக்கினர்.  
நிகழ்வில், பரணி பார்க் கல்வி குழுமத் தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலர் பத்மாவதி, முதன்மை முதல்வர் முனைவர்.ராமசுப்ரமணியன்,  "குரோத் அகாதெமி' பயிற்சி மைய இயக்குநர் பேராசிரியை கவிதா, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர் கலந்து கொண்டு அனைத்து பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.