நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வடக்குப்பாளையத்தில் முதியோர் தின விழா

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் சமூக நலத்துறை சார்பில் முதியோர் தின விழா மற்றும்

Updated On :8 அக்டோபர் 2018, 8:40 am IST

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் சமூக நலத்துறை சார்பில் முதியோர் தின விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் வடக்குப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
நேத்ரா அறக்கட்டளை ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதியுமான ஆர். தங்கவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் கேகே. சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்தினர்.  இதில் சார்பு நீதிபதி ஆர். தங்கவேல் பேசுகையில், இங்கு இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோருக்கு சட்டம் சார்ந்த பிரச்னைகள் களையப்படும், முதியோர் உதவித்தொகை, ஆதார் அட்டை பெறுவதற்கு மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அறக்கட்டளை பணியாளர் தீபா வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.