மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பேருந்து கூண்டு கட்டும் ஒப்பந்தத்தை வேறு மாநிலத்திற்கு வழங்கக் கூடாது

பேருந்து கூண்டு கட்டும் ஒப்பந்தத்தை வேறுமாநிலத்திற்கு வழங்கக்கூடாது என புதிய  திராவிட கழகம் வலியுறுத்தியுள்ளது. 

Updated On :3 செப்டம்பர் 2018, 3:08 am

பேருந்து கூண்டு கட்டும் ஒப்பந்தத்தை வேறுமாநிலத்திற்கு வழங்கக்கூடாது என புதிய  திராவிட கழகம் வலியுறுத்தியுள்ளது. 
கரூரில் அக்கட்சியின் தாந்தோணி  ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தாந்தோணி ஒன்றியச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பசுவை பி.சந்தோஷ் முன்னிலை வகித்தார். 
ஒன்றிய இளைஞர் அணி தலைவர் நாட்ராயன் வரவேற்றார். இதில்  மாவட்ட துணைச் செயலாளர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.எஸ்.ராஜ்கவுண்டர், மாநில மாணவரணி செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
கரூர் மாவட்டத்தில் சிறந்து விளங்கி தற்போது நசிவடைந்து வரும் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத் தொழிலுக்கான ஒப்பந்தத்தை வேறு மாநிலத்திற்கு தமிழக அரசு வழங்க்கக் கூடாது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் தடுக்கும் வகையில் சந்திப்பில் உயர்மின்கோபுரம் அமைக்க வேண்டும். கரூர்-பசுபதிபாபளையம் செல்லும் சாலையில் அண்ணாவளைவு அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனே சீரமைத்து போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
 மேலும் புதிய புறநகர் பேருந்து நிலையத்தை விரைந்து அமைத்திட வேண்டும். வேட்டுவக்கவுண்டர் இன மாமன்னர் வள்ளல் வல்வில் ஓரியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு எழுதப்பட்ட  வல்வில் ஓரி நூலை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.