பேருந்து கூண்டு கட்டும் ஒப்பந்தத்தை வேறுமாநிலத்திற்கு வழங்கக்கூடாது என புதிய திராவிட கழகம் வலியுறுத்தியுள்ளது.
கரூரில் அக்கட்சியின் தாந்தோணி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தாந்தோணி ஒன்றியச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பசுவை பி.சந்தோஷ் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய இளைஞர் அணி தலைவர் நாட்ராயன் வரவேற்றார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.எஸ்.ராஜ்கவுண்டர், மாநில மாணவரணி செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கரூர் மாவட்டத்தில் சிறந்து விளங்கி தற்போது நசிவடைந்து வரும் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத் தொழிலுக்கான ஒப்பந்தத்தை வேறு மாநிலத்திற்கு தமிழக அரசு வழங்க்கக் கூடாது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் தடுக்கும் வகையில் சந்திப்பில் உயர்மின்கோபுரம் அமைக்க வேண்டும். கரூர்-பசுபதிபாபளையம் செல்லும் சாலையில் அண்ணாவளைவு அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனே சீரமைத்து போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
மேலும் புதிய புறநகர் பேருந்து நிலையத்தை விரைந்து அமைத்திட வேண்டும். வேட்டுவக்கவுண்டர் இன மாமன்னர் வள்ளல் வல்வில் ஓரியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு எழுதப்பட்ட வல்வில் ஓரி நூலை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பேரூா் பட்டீசுவரா் கோயில் நகை மோசடி: எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

