கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி முதன்முறையாக வரும் 8ஆம் தேதி தொடங்கவுள்ளது என்றார் ஆட்சியர் த.அன்பழகன்.
முன்னதாக அனைத்து அரசுத் துறைகளின் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வுசெய்த அவர் மேலும் கூறியது: கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் 8 ஆம் தேதி துவங்கும் கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடக்கி வைக்கிறார். இதில், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் துறை, உள்ளிட்ட 27 அரசுத்துறைகளின் அரங்குகளும் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அரசுப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுகளும், தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கௌரி கிஷனுடன் பயணிக்கும் பல பெண்கள்! ‘தாரகை’ முதல் தோற்ற போஸ்டர்!

இந்தியாவில் அதிகம் விற்பனையான இவி கார்கள்: முதலிடத்தில் எம்ஜி விண்ட்சர்!

இந்திய அணிக்காக மானவ் சுதர் நீண்ட காலம் விளையாடுவார்: ஷுப்மன் கில்

அடடா! நெடுஞ்சாலைகள் திறக்கப்படும் முன் சோதனை ஓட்டம் நடத்தப்படலாம்!
விடியோக்கள்

"பேசணும்னு பேசாதீங்க!" பேரவையில் பொங்கிய அமைச்சர் ஆனந்த் | TVK | DMK | ADMK


