
அரசின் திட்டங்களை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
கரூரில் புதன்கிழமை கட்சியின் மதுரை மாவட்டப் பொருளாளர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க கரூர் வெங்கமேடு வந்த அவர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தபின் மேலும் கூறியது:
விநாயகர் சிலைகளை வைப்பதற்கான சூழலை போலீஸார் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிலை வைப்பதற்கான விதிகளைத் தளர்த்த வேண்டும். போக்குவரத்து இடையூறாக வைக்கப்படும் சிலைகளை மட்டுமே அவர்கள் தடை செய்ய வேண்டுமே தவிர, பொதுவாக சிலை வைப்போரை விதிகளைக் கூறி தடுப்பது ஏற்புடையதல்ல. 8 வழிச்சாலைக்கு நீதிமன்ற உத்தரவை மீறி தமிழக அரசு சில விதிமீறல்களைச் செய்கிறது. அதை அங்கே இருக்கும் மக்கள் முழுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசை பொறுத்தவரையில் மக்கள் மீது திட்டங்களை திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. மாறாக நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவதுதான் சிறந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து வரும் 14-ம் தேதி சென்னை ஆட்சியரகம் முன் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார்.
பேட்டியின்போது கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் நாட்ராயன், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், நெசவாளர் அணி மாநிலத் தலைவர் எம். ராஜேஷ், மாவட்டத் தலைவர் குப்புசாமி, நகரத் தலைவர் சிங்காரம், சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




