நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி: காதலன் மரணம்

கரூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம்  குடித்து தற்கொலைக்கு முயன்றதில் காதலன் இறந்தார்.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:14 am IST

கரூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம்  குடித்து தற்கொலைக்கு முயன்றதில் காதலன் இறந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த வயலூரைச் சேர்ந்தவர் சொர்ணம் (45), விவசாயி. இவர் லாலாப்பேட்டை-சீகம்பட்டிச்சாலையில் விவசாயம் செய்துவந்துள்ளார்.  இந்நிலையில் உறவுக்கார விதவை பெண்ணான அதே பகுதியைச் சேர்ந்த அமுதா(40) என்பவரோடு சொர்ணத்திற்கு தொடர்பு ஏற்பட்டதாம். 
இதுகுறித்து சொர்ணம் குடும்பத்துக்கு தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து முடிவு செய்துள்ளனர். இதையடுத்து திங்கள்கிழமை இரவு விவசாய நிலத்தில் இருவரும் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்துள்ளனர். 
இதை செவ்வாய்க்கிழமை கண்ட அப்பகுதியினர் இருவரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சொர்ணம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அமுதா மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக லாலாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.