கரூரில் வீடு புகுந்து திருடிய இருவரை கையும்களவுமாக பிடித்த பொதுமக்கள் அவர்களுக்கு அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட கருப்பகவுண்டன்புதூர் அசோக் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (45). இவர் அதேபகுதியில் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கரூரில் உள்ள தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவன ஊழியர். செவ்வாய்க்கிழமை காலை இருவரும் பணிக்குச் சென்று விட்டநிலையில் பிற்பகல் 12 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்த 4 இளைஞர்கள் உள்ளே புகுந்து 4 பவுன் செயின் மற்றும் பணம் ரூ.5,000 ஆகியவற்றை திருடினர்.
பின்னர் பக்கத்து வீட்டின் கதவையும் உடைக்க முயன்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள், அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் மட்டும் பைக்கில் ஏறி தப்பினர். இருவரைப் பிடித்த பொதுமக்கள் அடி கொடுத்து தாந்தோணிமலை போலீஸில் அவர்களை ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் தர்ம்புரி மாவட்டம் வெண்ணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமதுயூசுப் மகன்கள் மைதீன் (24), சாதிக்பாட்ஷா(26) எனத் தெரியவந்தது. தப்பிய இளைஞர்கள் குறித்தும் விசாரிக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


