தமிழகத்தில் பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உழைப்பாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கரூரில் அக்கட்சியின் மாநில கலந்தாய்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் நிறுவனர் தலைவர் ராமகோபாலதண்டாள்வர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தேக்கமலை முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலர் பி. வெங்கடேசன், துணைத் தலைவர் பரந்தாமன், துணைச் செயலர் சிவசுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் திருப்பூர், கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடுவது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும், அரசு கட்டுமானத் துறைக்கு என தனித்துறை ஏற்படுத்த வேண்டும். கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒட்டர், போயர்நாயக்கர் சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் 5 சதவீத தனி உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்லுடைக்கும் தொழிலாளர் நலவாரியம், போயர் நலவாரியம் உடனே அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போயர் பேரவை மாநில துணைச் செயலர் ரவி வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண் கொலை: இளைஞா் கைது

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்
திரைக் கதிர்
26 ஆண்டுகள் நிறைவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
