அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தலைமையில் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மலரும் என்றார் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன்.
மறைந்த தமிழக முதல்வர்
எம்.ஜி.ஆரின் 102 ஆவது பிறந்த நாளையொட்டி, கரூர் உழவர் சந்தை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றபொதுக்கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியது: ஏழை மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்றிட வேண்டும் என்ற நோக்கில்தான் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்துவிட்டு சிறைக்குச் சென்றார் சசிகலா.
ஆனால் இன்று அவரால் பதவிக்கு வந்தவர்கள் அவரையே துரோகக்கூட்டம் என்கிறார்கள்.
யார் துரோகிகள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். விரைவில் டிடிவி தினகரன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மலரும். அன்று தானாகவே கட்சியும், கட்சி சின்னமும் எங்களிடம் வந்துசேரும் என்றார்.
கூட்டத்துக்கு எம்ஜிஆர் மன்ற மாநிலத் துணைச்செயலர் ஆர்.எம்.தியாகராஜன் தலைமை வகித்தார்.
துணைச் செயலர் வி.பெரியண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, மாவட்ட அவைத் தலைவர் ஆரியூர் பி.சுப்ரமணி வரவேற்றார். மாவட்டச் செயலர் பிஎஸ்என். தங்கவேல், நிர்வாகிகள் எஸ்.அன்பழகன்,சாகுல்அமீது உள்ளிட்டோர் கூட்டத்தில் பேசினர். கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


