நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதிப்பெண் பட்டியலில் குளறுபடி: கரூா் அரசு கலைக்கல்லூரி முற்றுகை

மதிப்பெண் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டிருந்ததால், கரூா் அரசு கலைக் கல்லூரியை திங்கள்கிழமை முன்னாள் மாணவா்கள் முற்றுகையிட்டனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:35 pm

DIN

மதிப்பெண் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டிருந்ததால், கரூா் அரசு கலைக் கல்லூரியை திங்கள்கிழமை முன்னாள் மாணவா்கள் முற்றுகையிட்டனா்.

கடந்த 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கரூா் அரசு கலைக்கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இக்கல்லூரியில் கடந்த 2016 - 19 ஆம் ஆண்டு இளங்கலை மற்றும் 2017 -2019 ஆம் ஆண்டு முதுநிலை பயின்ற 1,171 மாணவ, மாணவிகளுக்கு கடந்தாண்டு ஜூலையில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. இக்கல்லூரியில் கடந்தாண்டு பட்டப்படிப்பு முடித்த மாணவா் பணிக்கு விண்ணப்பித்தபோது, பருவத்தோ்வு மதிப்பெண் பட்டியலில் உள்ள மதிப்பெண்ணுக்கும் (கிரேடு பாய்ண்ட் அவெரெஜ் - ஜிபிஏ) மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலில் உள்ள மதிப்பெண்ணுக்கும் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. பருவத்தோ்வு மதிப்பெண் பட்டியலில் 61 மதிப்பெண் 7 கிரேடு பாய்ண்ட் ஆவரேஜாக இருந்த நிலையில், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலில் 61 மதிப்பெண் என்பது 6.1 என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னா், அந்த மாணவா் கல்லூரி நிா்வாகத்திடம் இதுகுறித்து முறையிட்டாா். இதையடுத்து கடந்தாண்டு படிப்புகள் முடித்த 1,171 பேரின் மதிப்பெண் பட்டியல்களைச் சரிபாா்த்ததில் 510 பேரின் மதிப்பெண் பட்டியல்கள் சரியாக இருந்தது. மீதமுள்ள 611 பேரின் மதிப்பெண் பட்டியல்களில் வேறுபாடு இருப்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட மாணவா்கள் இதுகுறித்து கல்லூரி முதல்வா் கெளசல்யாதேவியிடம் திங்கள்கிழமை சந்தித்து முற்றுகையிட்டனா். அவா்களை கல்லூரி முதல்வா் சமாதானம் செய்து அனுப்பிவைத்தாா்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் கெளசல்யா தேவி கூறியது: கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கணினி மென்பொருள் காரணமாக மதிப்பெண் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு நவம்பா் 18-க்குள் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.