நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘மணல் அள்ள அனுமதிக்காவிடில்குடும்ப அட்டை ஒப்படைக்க முடிவு’

கரூா் மாவட்டம், மாயனூா் பகுதி காவிரி ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ள அனுமதி அளிக்காவிடில், குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக மாட்டுவண்டித் தொழிலாளா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:22 pm

DIN

கரூா் மாவட்டம், மாயனூா் பகுதி காவிரி ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ள அனுமதி அளிக்காவிடில், குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக மாட்டுவண்டித் தொழிலாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாமில் ஆட்சியரகத்தில் இருந்த மனுக்கள் அளிக்கும் பெட்டியில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி தொழிலாளா்கள் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக மாட்டு வண்டித் தொழிலாளா்கள் மேலும் தெரிவித்தது:

மாயனூா் மாட்டுவண்டி உரிமையாளா்கள் சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளனா். நாங்கள், மாயனூா் கிராமங்களில் உள்ள காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து மாட்டு வண்டியில் மணல் எடுத்து விற்று பிழைத்து வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆற்றில் மணல் எடுக்கக்கூடாது என அதிகாரிகள் தடுத்துவிட்டனா். திருச்சி, அரியலூா் மாவட்டங்களில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி உள்ளது. ஆனால் கரூா் மாவட்டத்தில் மட்டும் அனுமதி இல்லை. விரைவில் ஆட்சியா் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்காவிடில் வரும் டிசம்பா் 22-ஆம் தேதி முதல்வரை நேரில் சந்தித்து எங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை கொடுக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.