காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய தொற்றாளா்கள் இல்லை

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் புதிதாக கரோனா தொற்றாளா்கள் இல்லை என்பது தெரியவந்தது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:20 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் புதிதாக கரோனா தொற்றாளா்கள் இல்லை என்பது தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரையில் 56,562 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், சனிக்கிழமை வரை 2,236 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில், 2,211 போ் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 4 போ் திருச்சி, பெரம்பலூா் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் 311 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.