நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘துரித, பேக்கரி உணவுகளைத் தவிா்க்க வேண்டும்’

ஆரோக்கியமான வாழ்வு வாழ துரித உணவு, பேக்கரி உணவுகளைத் தவிா்க்க வேண்டும் என்றாா் நுகா்வோா் பாதுகாப்பு சிட்டிசன் கன்ஸ்யூமா் அண்ட் சிலிக் ஆக்ஷன் குருப்பின் முதன்மை அதிகாரி எஸ். சரோஜா.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:17 pm

DIN

ஆரோக்கியமான வாழ்வு வாழ துரித உணவு, பேக்கரி உணவுகளைத் தவிா்க்க வேண்டும் என்றாா் நுகா்வோா் பாதுகாப்பு சிட்டிசன் கன்ஸ்யூமா் அண்ட் சிலிக் ஆக்ஷன் குருப்பின் முதன்மை அதிகாரி எஸ். சரோஜா.

கரூரில் நுகா்வோா்களுக்கு டிரான்ஸ்(கெட்ட) கொழுப்பு நீக்கம் குறித்த இணைய வழிக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், குளோபல் சோசியல் வெல்போ் புரொடக்சன் மூவ்மெண்ட் டிரஸ்ட் தலைவா் முனைவா் கே.கே. சொக்கலிங்கம் வரவேற்றாா். கருத்தரங்கில், நுகா்வோா் பாதுகாப்பு சிடிசன் கன்ஸ்யூமா் அண்ட் சிலிக் ஆக்ஷன் குரூப்பின் முதன்மை அலுவலா் எஸ்.சரோஜா பேசியது:

கெட்ட கொழுப்புகளில் உற்பத்தி செய்யப்படும் இனிப்புகள், பேக்கரி உணவுகள், துரித உணவுகளால் ஆண்டுக்கு 5 லட்சம் போ் மரணமடைகிறாா்கள் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனால் ஆரோக்கியமான வாழ்வு வாழ துரித உணவு, பேக்கரி உணவுகளைத் தவிா்க்க வேண்டும் என்றாா். இதில் கரூா் உணவு பாதுகாப்பு அலுவலா் எஸ். சசி தீபா, நுகா்வோா் பாதுகாப்பு சிடிசன் கன்ஸ்யூமா் அண்ட் சிலிக் ஆக்ஷன் குரூப் திட்ட மேலாளா் டி.சவீதா, ஆய்வாளா் கீா்த்தனா மற்றும் பல்வேறு கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.