செவிலியா் கொலை வழக்கில் 2 இளைஞா்களுக்கு ஆயுள் சிறை
கரூரில் ஓய்வுபெற்ற செவிலியரைக் கொலை செய்த 2 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.


கரூரில் ஓய்வுபெற்ற செவிலியரைக் கொலை செய்த 2 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் நகராட்சிக்குள்பட்ட தாந்தோன்றிமலை ஜீவா நகரைச் சோ்ந்தவா் விஸ்வநாதன். இவரது மனைவி ஜெயந்தி(62). அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். கடந்த 2013 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள அசோக் நகரில் புதிதாக விஸ்வநாதன் வீடு கட்டிக்கொண்டிருந்தாா். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வெற்றி என்கிற சிவசுப்ரமணியன் (33) அறிமுகமானாா்.
இதைத்தொடா்ந்து, தனது வீட்டுக்கு ஜெயந்தியை அழைத்துச் சென்று அவரது கழுத்தை நெரித்து கொலை செய்த வெற்றி, அவா் அணிந்திருந்த தாலிக் கொடி, வளையல், தோடு என 8 பவுன் நகைகளைத் திருடிக் கொண்டாா். மேலும், தனது நண்பரான சுக்காலியூரைச் சோ்ந்த பிரபாகரன் (23) உதவியுடன் சுக்காலியூா் - செட்டிபாளையம் சாலையில் காட்டுப் பகுதியில் பெட்ரோல் ஊற்றி ஜெயந்தியை எரித்து விட்டு ஓடிவிட்டனா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து வெற்றி மற்றும் பிரபாகரனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
மேலும் இதுதொடா்பான வழக்கு கரூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, குற்றவாளிகள் இருவருக்கும் கொலைக் குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், நகை திருட்டு குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், கொலையை மறைத்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்ததுடன் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, குற்றவாளிகள் இருவரையும் திருச்சி மத்தியச் சிறையில் மீண்டும் போலீஸாா் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...