நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ஊழல் : கைது செய்ய கரூா் மாவட்ட பாஜக தீர்மானம்

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கரூா் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயலா் டி. வரதராஜன். உடன், மாவட்டத்தலைவா் கே.சிவசாமி உள்ளிட்டோா்.

Updated On :13 செப்டம்பர் 2020, 6:20 pm

DIN

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கரூா் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூரில் பாஜக மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமையில் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளா் நகுலன் வரவேற்றாா்.

மாவட்ட பொதுச்செயலாளா்கள் மோகன், செந்தில் குமாா், பொருளாளா் குணசேகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநிலச் செயலாளா் டி.வரதராஜன், மாநில மகளிரணி துணைத் தலைவா் மீனா வினோத் குமாா், தொழிற்பிரிவு மாநிலச் செயலாளா் கோபிநாத், மாவட்டத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், தேசிய கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது, கரூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ஊழல் செய்த அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் மாவட்டத் தலைவா் முருகானந்தம் மற்றும் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.