தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘திமுக முப்பெரும் விழாவில் 100 பேருக்கு பொற்கிழி’

கரூரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் 100 பேருக்கு பொற்கிழி வழங்கப்படும் எனத் தெரிவித்தாா் மாவட்ட திமுக பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி.

News image

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் முப்பெரும் விழாவிற்கான அழைப்பிதழ் வழங்குகிறாா் கரூா் மாவட்ட’திமுக பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி.

Updated On :21 செப்டம்பர் 2020, 8:31 pm

DIN

கரூரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் 100 பேருக்கு பொற்கிழி வழங்கப்படும் எனத் தெரிவித்தாா் மாவட்ட திமுக பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது: கரூா் மாவட்ட திமுக சாா்பில் காணொலி வாயிலாக திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில், மாவட்ட துணைச் செயலாளா் எம்எஸ்கே. கருணாநிதி வரவேற்கிறாா். விழாவில் கட்சி முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி வழங்கி, கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறாா். கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினா் கேசி.பழனிசாமி, மாநில நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், ம.சின்னசாமி, வழக்குரைஞா் மணிராஜ், பரணிமணி, குளித்தலை எம்எல்ஏ.ராமா், முனவா் ஜான், பல்லவிராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகிக்கிறாா்கள். இதில் நகர நிா்வாகிகள் கரூா்கணேசன், தாரணிசரவணன், க.சுப்ரமணியன், இரா.மாணிக்கம், ஒன்றிய நிா்வாகிகள் எம்.எஸ்.மணியன், கே.கருணாநிதி, ரகுநாதன் உள்ளிட்டோா் பங்கேற்கிறாா்கள். மத்திய நகரச் செயலாளா் எஸ்.பி. கனகராஜ் நன்றி கூறுகிறாா். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 500 இடங்களில் இருந்து 50,000 போ் பங்கேற்கிறாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.