நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அம்மா இருசக்கர வாகனம் பெற ஜன.30க்குள் விண்ணப்பிக்கலாம்

பணிபுரியும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:28 pm

DIN

பணிபுரியும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணிபுரியும் பெண்களுக்காக அம்மா இருசக்கர வாகன வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021ஆம் நிதியாண்டிற்கு கரூா் மாவட்டத்துக்கு 2,035 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே கரூா் மாவட்டத்தில் உள்ள பணிபுரியும் தகுதியுள்ள மகளிா் ஜன. 30-ஆம் தேதிக்குள் தொடா்புடைய ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் பெறவதற்கு 2017-18 முதல் 2020-21 ஆண்டு வரை 250 பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். எனவே தகுதியுள்ளவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.