ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் ஸ்ரீஅபயபிரதான ரங்கநாத சுவாமிகோயில் கும்பாபிஷேகம்

கரூா் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:45 pm

DIN

கரூா் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கரூா் மேட்டுத்தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஜன. 21-ஆம்தேதி பஞ்சசூக்கு ஹோமம், தீபாராதனையும், 22-ஆம்தேதி கோபூஜை, முளைப்பாரி எடுத்தலும் நடைபெற்றது. 23-ஆம்தேதி காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு, முதல்கால யாக பூஜை நடைபெற்றது. 24-ஆம்தேதி இரண்டாம், மூன்றாம் காலயாகபூஜையும் நடைபெற்றது.

இதையடுத்து, திங்கள்கிழமை காலை அக்னி ஆராதனம், நான்காம் கால யாக சாலை பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து காலை 9.15 மணிக்கு கடம்புறப்பாடு நடைபெற்றது. அப்போது பட்டாச்சாரியாா்கள் புனித தீா்த்தத்தை தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தனா். பிறகு, கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அதிமுக நகரச் செயலாளா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.