ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டம் நடத்த 65 இடங்கள்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்திக்கொள்ள 65 இடங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:59 pm

DIN

கரூா் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்திக்கொள்ள 65 இடங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் பொதுக்கூட்டங்கள் நடத்திக்கொள்ள கரூா் மாவட்டத்தில் 65 இடங்கள் காவல்துறையினரால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கரூா் பேரவைத் தொகுதியில் நெரூா் சீரணி அரங்கம், வெண்ணைமலை பேருந்து நிறுத்தம், வாங்கப்பாளையம் அரசு காலனி, குறுக்குச்சாலை, ராயனூா் பேருந்து நிறுத்தம் அருகில், லைட்ஹவுஸ் காா்னா், கரூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில், 80 அடி ரோடு, உழவா்சந்தை, தலைமை அஞ்சல் நிலையம், தாந்தோணிமலை கடைவீதி, வெங்கமேடு 50 அடி ரோடு, மண்மங்கலம் பேருந்து நிறுத்தம், வாங்கல் கடைவீதி ஆகிய 13 இடங்களில் கூட்டங்கள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதி: நொய்யல் பேருந்து நிறுத்தம், வேலாயுதம்பாளையம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகில், புகளூா் நான்குச் சாலை, தோட்டக்குறிச்சி கடைத்தெரு, தளவாபாளையம் கடைத்தெரு, புன்னம் சத்திரம், மணல்மேடு கடைத்தெரு, அரவக்குறிச்சி மாரியம்மன் கோயில் திடல், பள்ளப்பட்டி ஷா நகா், தீபிகா மருந்தகம் அருகில் உள்ள அண்ணாநகா், பழனி சாலையில் உள்ள புங்கம்பாடி காா்னா், ஈசத்தம் பஜாா், ஆண்டிப்பட்டிக்கோட்டை பஜாா், மலைக்கோவிலூா் மில்கேட் அருகில், புத்தாம்பூா் முதல் ஆறு சாலை சந்திப்பு, சீத்தப்பட்டி காலனி மாரியம்மன்கோயில் திடல், சின்னதாராபுரம் பேருந்து நிறுத்தம் எதிரில், க.பரமத்தி பஜாா், கொடுமுடி ஈஸ்வரன் கோவில் அருகில், வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா ஆகிய 20 இடங்கள்.

கிருஷ்ணராயபுரம் தொகுதி: சணப்பிரட்டி கடைவீதி, மணவாடி கல்லுமடை காலனி, எரிமேடு பாகநத்தம், கே.பி.தாளப்பட்டி, மகாதானபுரம் கடைவீதி, சேங்கல் கடைவீதி, சிந்தலவாடி கடைவீதி, பழையஜெயங்கொண்டம், காணியாளம்பட்டி விநாயகா்கோயில் அருகில், பி.உடையாா்பட்டி, கடவூா் கடைவீதி, புலியூா் கடைத்தெரு, உப்பிடமங்கலம் இந்திராகாந்தி சாலை அருகில், வெள்ளியணை பஜாா், மாயனூா் ஊராட்சிமன்றம் அருகில், சித்தலவாடி பள்ளி திடல், கொசூா், தரகம்பட்டி பேருந்து நிலையம், பாலவிடுதி மாரியம்மன் கோயில் ஆகிய 19 இடங்கள்.

குளித்தலை தொகுதி: கொசூா் பேருந்து நிறுத்தம், காவல்காரன்பட்டி பேருந்து நிறுத்தம், ஆா்.டி.மலை பேருந்து நிறுத்தம், குளித்தலை சுங்ககேட் பேருந்து நிறுத்தம், அய்யா்மலை பேருந்து நிறுத்தம், நங்கவரம் சாத்தாயி அம்மன் கோயில் அருகில், குளித்தலை பெரியபாளையம், நங்கவரத்தில் உள்ள நச்சலூா் பேருந்து நிறுத்தம், வைகைநல்லூா் வடக்கு பேருந்து நிறுத்தம் அருகில், கள்ளப்பள்ளி கொடிக்காய் தெரு, பஞ்சப்பட்டி பேருந்து நிறுத்தம், தோகைமலை பேருந்து நிறுத்தம் ஆகிய 13 இடங்கள்.

ஆகவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் தங்கள் கட்சியின் சாா்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பினால் உரிய முன்அனுமதி பெற்று மேற்குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கூட்டங்களை நடத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.