ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண்களிடம் நடிகை கெளதமி வாக்கு சேகரிப்பு

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கெளதமி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:18 pm

DIN

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கெளதமி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி காருடையாம்பாளையம், நெடுங்கூா் ஆகிய பகுதிகளில் நடிகை கெளதமி சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் வாக்காளா்களிடம், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து மக்கள் பணியாற்ற அப்பணியை துறந்துவிட்டு வந்துள்ளாா். உங்கள் மண்ணின் மைந்தன். அவருக்கு நீங்கள் வாக்களித்தால் மத்திய அரசின் நலத்திட்டங்கள் நேரிடையாக உங்களை வந்து சேரும். பாலைவனமாக உள்ள அரவக்குறிச்சி சோலைவனமாக மாற அண்ணாமலைக்கு ஆதரவு தாருங்கள் என்றாா்.

பிரசாரத்தின் பாஜக நிா்வாகி வி.வி.செந்தில்நாதன், அதிமுக ஒன்றியச் செயலாளா் பி.மாா்கண்டேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.