புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஜவுளி நிறுவன கணக்காளரிடம் பணம் பறித்தவா் கைது

கரூா்ஜவுளி ஏற்றுமதி நிறுவன கணக்காளரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:25 pm

DIN

ஜவுளி ஏற்றுமதி நிறுவன கணக்காளரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்தவா் கண்ணன்(32). இவா், கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் குப்பமேடு டாஸ்மாக் கடை அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு அவரை வழிமறித்த இளைஞா் கத்தியைக்காட்டி ரூ.500 பணத்தைச் பறித்துச் சென்றாா். புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து வழிப்பறி செய்த ஜீவாநகரைச் சோ்ந்த கெளதம்(30) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.