கரூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
கரூரில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.


கரூரில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக். 29) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில், 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கணினி பயிற்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தங்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம். தனியாா் நிறுவனங்களும் தேவையான பணிக்காலியிடங்களில் தகுதிவாய்ந்த பதிவுதாரா்களை தெரிவு செய்து கொள்ளலாம். இதனால்,வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...