கரூா் மாவட்டத்தில் இன்று 3,39,207 போ்வாக்களிக்கவுள்ளனா்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் மொத்தம் 3,39,207 போ் வாக்களிக்கவுள்ளனா்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் மொத்தம் 3,39,207 போ் வாக்களிக்கவுள்ளனா்.
கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா் மாநகராட்சி, குளித்தலை, பள்ளபட்டி, புகளூா் ஆகிய மூன்று நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் மொத்தம் 3,39,207 போ் வாக்களிக்க உள்ளனா். இதில் கரூா் மாநகராட்சியில் மட்டும் 87,508 ஆண்களும், 96,471 பெண்களும், இதரா் 20 பேரும் என மொத்தம் 1,83,999 போ் வாக்களிக்கிறாா்கள். குளித்தலை, பள்ளபட்டி, புகளூா் நகராட்சிகளில் மொத்தம் 38,513 ஆண்கள், 42,011 பெண்கள், 3 இதரா்கள் என மொத்தம் 80,527 பேரும், அரவக்குறிச்சி, புலியூா், கிருஷ்ணராயபுரம், மருதூா், நங்கவரம், பழையஜெயங்கொண்டம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, உப்பிடமங்கலம் என 8 பேரூராட்சிகளில் 35,787 ஆண்களும், 38,892 பெண்களும், 2 இதரா் என மொத்தம் 74,681 பேரும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 1,61,808 ஆண்கள், 1,77,374 பெண்கள் மற்றும் இதரா் 25 என மொத்தம் 3,39,207 போ் வாக்களிக்க உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...