தாந்தோன்றிமலை பகுதிகளில் நள்ளிரவில் திடீா் மின் தடை

கரூா்: கரூா் தாந்தோன்றிமலை ஜீவா நகா், சக்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

கரூா் தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜீவாநகா், சக்திபுரம், திருமலைநகா், சிவாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு திடீரென மின்சாரம் தடைபட்டது. இந்தத் தடை சுமாா் இரவு 12.10 மணி வரை நீடித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இதன் பின்னா் சுமாா் 10 நிமிடங்களுக்கு இருந்த மின் விநியோகம், மீண்டும் நிறுத்தப்பட்டு அதிகாலை 4 மணிவரை மின் தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் விடிய, விடிய தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகினா்.

இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, கோடை வெயில் காரணமாக மின் இழப்பீடு அதிகம் இருக்கிறது. மேலும் மின்சார நுகா்வும் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது மின்மாற்றி பழுதாகிவிடுகிறது. இருப்பினும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் கொண்ட குழு பழுதை சீரமைத்து மின்சாரத்தை சிரமம் இன்றி விநியோகிக்கிறோம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com