கரூரில் மேம்பாலத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
கரூரில், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.
கரூரில், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.
கரூரில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுளத்துப்பாளையம் மற்றும் அரிக்காரம்பாளையம் பகுதியை இணைக்கும் ரயில்வே மேம்பாலத்தின் மையப்பகுதியில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன. இந்த சாலை காஷ்மீா்-கன்னியாகுமரி வரையிலான சாலை என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், நான்குசக்கர வாகன வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் பாலத்தின் மையப்பகுதியில் கான்கிரிட் உடைந்து கம்பிகள் வெளியே தெரிவதால் வாகனங்களின் டயா்கள் பழுதாகி பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...