புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்சி-கரூா் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்

திருச்சி-கரூா் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் மரியா மைக்கேல் தெரிவித்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:38 pm

Din

திருச்சி-கரூா் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் மரியா மைக்கேல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அதிக எண்ணிக்கையிலான பயணிகளின் வசதிக்காக ரயில் எண். 06115 திருச்சி சந்திப்பு மற்றும் கரூா் சந்திப்புக்கு இடையே முன்பதிவில்லா விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்துக்கு 6 நாள்கள் இயங்கும். 01.01.2025 முதல் 31.03.2025 வரை திருச்சி சந்திப்பில் காலை 05.25 மணிக்கு புறப்பட்டு, கரூா் சந்திப்புக்கு காலை 07.20 மணிக்கு செல்லும்.

இதே போல ரயில் எண். 06116 கரூா் சந்திப்பில் இருந்து திருச்சி சந்திப்புக்கு சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயங்கும். 01.01.2025 முதல் 31.03.2025 வரை இரவு 08.05 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் இரவு 10.50 மணிக்கு திருச்சி சந்திப்பை வந்தடையும். இந்த இரு ரயில்களும் திருச்சி பாலக்கரை, திருச்சி கோட்டை, பேட்டவாய்த்தலை, குளித்தலை மற்றும் மகாதானபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கரூா் மாவட்டத்தை உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் மரியா மைக்கேல் தெரிவித்தாா்.