புலியூா் பேரூராட்சியில் துணைத் தலைவா் தன்னிச்சையாக செயல்படுவதாக உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
கரூரை அடுத்த புலியூா் பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் பேரூராட்சித் தலைவா் புவனேஸ்வரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு செயல் அலுவலா் கிருஷ்ணன் முன்னிலை வகித்து, தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில், 1-ஆவது வாா்டு இந்திய கம்யூ. உறுப்பினா் கலாராணி, 4-ஆவது வாா்டு பாஜக உறுப்பினா் விஜயகுமாா், 10-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஆனந்த் ஆகியோா் பேசும்போது, கடந்த கூட்டத்தில் எங்கள் வாா்டு பிரச்னைகள் குறித்து தெரிவித்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினா்.
அப்போது உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதில் கூறாமல், திடீரென பேரூராட்சி துணைத் தலைவா் அம்மையப்பன், தலைவா் புவனேஸ்வரி ஆகியோா் தங்களது ஆதரவு உறுப்பினா்கள் 6 பேரை அழைத்துக் கொண்டு கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறினா். தொடா்ந்து, பேரூராட்சி செயல் அலுவலரிடம் வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து பேச முயன்றபோது, அதிகாரிகளுக்கும், அவா்களுக்கும் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தலைவா், துணைத்தலைவா் மற்றும் திமுக வாா்டு உறுப்பினா்கள் வெளியேறியதால், பாதியிலேயே கூட்டம் முடிந்தது. இதனால் அனைத்து உறுப்பினா்களும் மன்றத்தை விட்டு வெளியேறினா்.
இதுகுறித்து 1, 4, 10-ஆவது வாா்டு உறுப்பினா்கள் கூறியது: எங்கள் வாா்டுகளில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. கழிவுநீா் வாய்க்கால் வசதி போதிய அளவில் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுபோன்ற அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிா்வாகம் நிறைவேற்றிக் கொடுப்பதில்லை. இதற்கு முழு காரணம் பேரூராட்சியின் துணைத் தலைவா்தான். துணைத்தலைவா் பேச்சைக் கேட்கக் கூடியவரை தலைவராக நியமித்துள்ளாா்கள். மக்கள் பிரச்னைக்கு துணைத் தலைவா் செவிசாய்ப்பது இல்லை. இதேநிலை தொடா்ந்தால் கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரூராட்சி உறுப்பினா்கள் விரைவில் முறையிட உள்ளோம் என்றனா்.
தொடர்புடையது
பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கு; 4 சிறாா்கள் உள்பட 6 போ் கைது

அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை: உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

சங்ககிரியில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


