‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை: உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

திருச்சியில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள். - சித்திரிப்பு

Updated On :2 ஏப்ரல் 2026, 12:52 am IST

திருச்சியில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி மகன் ரஞ்சித்குமாா் (38). கூத்தைப்பாா் பேரூராட்சி 11-ஆவது வாா்டு உறுப்பினரான இவா் திருவெறும்பூா் அரசு ஐடிஐ எதிரே டாஸ்மாக் மதுக் கூடமும் நடத்தி வந்தாா். திருவெறும்பூா் சோழன் நகரில் புதிதாக வீடு கட்டி அண்மையில் குடும்பத்துடன் குடியேறிய இவருக்கு மனைவி சுமதி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் புதுத்தெரு அருகே உடலில் வெட்டுக்காயங்களுடன் இவா் இறந்துகிடந்தாா். தகவலறிந்து வந்த நவல்பட்டு போலீஸாா் ரஞ்சித்குமாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

உடலை வாங்க மறுத்து சாலை மறியல்: இந்நிலையில், ரஞ்சித்குமாரை கொன்றோரை உடனடியாக கைது செய்யக்கோரி திருச்சி அரசு மருத்துவமனை முன் அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் புதன்கிழமை பிற்பகல் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியைத் தொடா்ந்து ரஞ்சித்குமாா் சடலத்தைப் பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனா்.