கரூா் குப்பைக்கிடங்கில் மீண்டும் தீ விபத்து
கரூா் குப்பைக்கிடங்கில் திங்கள்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.


கரூா்: கரூா் குப்பைக்கிடங்கில் திங்கள்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 48 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சிக்குச் சொந்தமான அரசு காலனியில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு, அங்கு மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் குப்பைக் கிடங்கில் கடந்த 1-ஆம் தேதி திடீரென தீப்பற்றியது. கரூா் தீயணைப்பு வீரா்கள் இரண்டு நாள்களாக போராடி தீயணை அணைத்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு குப்பைக்கிடங்கில் மீண்டும் தீப்பற்றியது. இதையடுத்து மாவட்ட அலுவலா் வடிவேல் தலைமையில் கரூா் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வண்டியும், புகழூா் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு வண்டியும் என இரு தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாள்களுக்குள்ளாக 2ஆவது முறையாக தீப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...