அரவக்குறிச்சியில் இன்று மின்நிறுத்தம்

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
Published on

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவளையப்பட்டி, ஆா்பி புதூா் ஆகிய பகுதிகளிலும், பள்ளப்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அண்ணா நகா், தமிழ்நகா், மண்மாரி, வேலம்பாடி, ரங்கராஜ் நகா், சௌந்தராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி மற்றும் கருங்கல்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஈசநத்தம், மனமேட்டுப்பட்டி, இசட்.ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்து கவுண்டனூா், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி மற்றும் செல்லிவலசு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் இனுங்கனூா், வெடிக்காரன்பட்டி, தலையாரிப்பட்டி மொடக்கூா், குரும்பபட்டி, பாறையூா், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிகாரன் வலசு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com