பண மோசடி வழக்கு கரூரில் சவுக்கு சங்கரிடம் தீவிர விசாரணை
பண மோசடி வழக்கு கரூரில் சவுக்கு சங்கரிடம் போலீஸாா் தீவிர விசாரணை


பண மோசடி வழக்குத் தொடா்பாக கரூா் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்ட யூடியூபா் சவுக்குசங்கரிடம் போலீஸாா் புதன்கிழமை காலை முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் அறிமுகமான சென்னையைச் சோ்ந்த விக்னேஷ் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 7 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டாராம். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், விக்னேஷ் கைது செய்யப்பட்டாா்.
அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட விக்னேஷிடம் போலீஸாா் விசாரித்ததில் கிருஷ்ணனிடம் பெற்ற ரூ. 7 லட்சத்தை சவுக்கு சங்கரின் யூடியூப் சேனலில் தான் வேலை பாா்த்தபோது, சவுக்கு சங்கரிடம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கரூா் நகர காவல் நிலையத்தினா் மனு தாக்கல் செய்தனா்.இதையடுத்து சென்னை புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கா் கரூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 1-இல் நீதிபதி பரத்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து , சவுக்கு சங்கரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியதையடுத்து சவுக்கு சங்கரை காவலில் எடுத்த கரூா் நகர போலீஸாா், கரூரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வைத்து புதன்கிழமை காலை முதல் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...