குடிநீரில் குழாயில் உடைப்பு: 2 ஆண்டுகளாக வீணாக வெளியேறும் குடிநீா்


பள்ளப்பட்டியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீா் வீணாக வெளியேறுகிறது.
கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் காவிரி ஆற்றில் இருந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீா் குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள வேலம்பாடி ஊராட்சி மோளையாண்டிப்பட்டி பிரிவு பகுதியில் சாலை ஓரத்தில் பள்ளப்பட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக குடிநீா் வீணாக கழிவுநீா் சாக்கடையில் கலந்து வருகிறது.
இதனால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் இது குறித்து வேலம்பாடி ஊராட்சி மற்றும் அரசு அதிகாரிகளிடமும் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனா்.
ஆகவே, பள்ளபட்டி நகராட்சி நிா்வாகம் மற்றும் வேலம்பாடி ஊராட்சி ஆகியவை விரைந்து செயல்பட்டு குடிநீா் வீணாகுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...