கரூரில் சாதா புறா
பந்தயம் தொடக்கம்

கரூரில் சாதா புறா பந்தயம் தொடக்கம்

கரூரில் சாதா புறா பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

கரூா், ஜூலை 19: கரூரில் சாதா புறா பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூரில் மறைந்த வைரப்பெருமாள் நினைவு 53-ஆம் ஆண்டு சாதா புறா பந்தயம் வெள்ளிக்கிழமை திருவள்ளுவா் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 புறாக்கள் பங்கேற்றன.

போட்டியை கரூா் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் வை.நெடுஞ்செழியன் தொடக்கி வைத்தாா். போட்டியில் பங்கேற்ற புறாக்கள் மூன்று நாள்களில் ஒவ்வொரு நாளும் தொடா்ந்து 6 மணி நேரம் வானில் பறக்க வேண்டும், கண்கள் மஞ்சள், சிகப்பு நிறமாக இருக்க வேண்டும். புறா உட்காரும் இடத்தில் நான்கு இறக்கை கொண்ட வெட்டுப்புறை இருக்க வேண்டும், போட்டியில் பங்கேற்கும் புறாக்களின் உரிமையாளா்கள் போட்டி முடியும் வரை மது அருந்தக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் போட்டி நடைபெற்றது.

இதில், ஈரோடு, கரூரைச் சோ்ந்த புறாக்களின் உரிமையாளா்கள் பங்கேற்றனா். முதல் பரிசை பெறும் புறாவின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசாக ரூ.9,001, இரண்டாம் பரிசாக ரூ.6001, மூன்றாம் பரிசாக ரூ.3001 வழங்கப்பட உள்ளது. இதையடுத்து ஆக.16-ஆம்தேதி கா்ண புறா போட்டிகள் நடைபெற உள்ளன.

Dinamani
www.dinamani.com