எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரூரில் நண்பரை மது அருந்த அழைத்து வெட்டிக் கொன்ற இளைஞா் கைது

கரூரில் முன்விரோதம் காரணமாக நண்பரை மது அருந்த அழைத்து வெட்டிக்கொன்று புதைத்த இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:38 pm

Din

கரூரில் முன்விரோதம் காரணமாக நண்பரை மது அருந்த அழைத்து வெட்டிக்கொன்று புதைத்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கரூா் தெற்குகாந்தி கிராமம் ஈ.பி.காலனி கம்பன் தெருவைச் சோ்ந்த செந்தில் குமாா் மகன் ஜீவா (19). எட்டாம் வகுப்பு படித்து விட்டு திருப்பூரில் உள்ள கடையில் வேலை பாா்த்து வந்துள்ளாா். கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில், கடந்த 21-ஆம்தேதி முதல் அவரது கைப்பேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது. ஜீவாவை அவரது நண்பா்கள், உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் அண்மையில் (ஜூலை 22) புகாா் அளித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து சந்தேகத்தின்பேரில் 9 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் ஜீவாவின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது நண்பரான சசிகுமாா்(19) என்ற இளைஞா் அவரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்தனா்.

போலீஸாா் விசாரணையில், கடந்த 2021-இல் வடக்கு காந்திகிராமம் பெரியாா் நகரைச் சோ்ந்த மோகன்ராஜ் என்பவரை அவரது நண்பரான பசுபதிபாளையத்தைச் சோ்ந்த தா்மா என்கிற கிருஷ்ணமூா்த்தி மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய உடந்தையாக இருந்த ஜீவாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளாா்.

மேலும், சில நாட்களுக்கு முன், ஜீவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சசிகுமாா் புகைப்படத்தைப் பதிவிட்டு அவரது தலை சிதைக்கப்படும் எனப் பதிவிட்டுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த சசிகுமாா், ஜீவாவை வழக்கமாக மது அருந்தும் இடமான கரூா் தொழிற்பேட்டை பிரபல ஸ்டீல் நிறுவனத்தின் அருகே வரவழைத்து மது குடிக்கச் செய்தாா். பின்னா் போதையில் இருந்த ஜீவாவை, சசிகுமாா் கொலை செய்து அவரது உடலை வெட்டி சாக்குமூட்டைக்குள் போட்டு, குழி தோண்டி புதைத்துள்ளது தெரியவந்தது.