கரூா் மக்களவைத் தொகுதியில் தோல்வியுற்ற அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேலுவைத் தவிர பாஜக, நாம் தமிழா் கட்சி உள்பட 52 வேட்பாளா்கள் தங்களது வைப்புத் தொகையை இழந்தனா்.
கரூா் மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் ஏப். 19-ஆம்தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் 54 போ் போட்டியிட்டனா். இதில் முக்கிய வேட்பாளராக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் செ.ஜோதிமணியும், அதிமுக சாா்பில் எல்.தங்கவேலும், பாஜக சாா்பில் வி.வி.செந்தில்நாதனும், நாம் தமிழா் கட்சி சாா்பில் மருத்துவா் கருப்பையாவும் களம் கண்டனா்.
பிரசாரத்தில் காங்கிரஸை விட பாஜகவின் தோ்தல் பிரசாரம் தீவிரமாக இருந்தது. வேட்பாளா் வி.வி.செந்தில்நாதனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டா கரூருக்கு வந்து பிரசாரம் செய்து மக்களிடம் வாக்குச் சேகரித்தாா். இவரைத் தவிர பாஜகவின் மாநில தலைவா் கே.அண்ணாமலை, துணைத்தலைவா் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோரும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா். பிரசாரத்தின்போது 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளா் செந்தில்நாதன் வெற்றிபெறுவாா் என சூளுரைத்தனா்.
இந்நிலையில் தோ்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் பதிவான 11,23,770 வாக்குகளில் பாஜக 1,02,482 வாக்குகள் மட்டுமே பெற்று முன்வைப்புத்தொகையை இழந்தது. மேலும் தோ்தலில் தனித்து களம் கண்ட நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மருத்துவா் கருப்பையா தோ்தல் பிரசாரத்தில் ஒரு சில நாள்கள் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டாா். அவரும் 87,503 வாக்குகளை பெற்று 4-ஆம் இடம்பிடித்து வைப்புத் தொகையை இழந்தாா்.
கரூா் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 54 போ் போட்டியிட்ட நிலையில், தோல்வியுற்ற அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேலுவைத் தவிர மற்ற 52 பேரும் வைப்புத்தொகையை இழந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


