பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்க வாயில் கூட்டம்

கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்க வாயில் கூட்டம்

News image
Updated On :9 மே 2024, 8:36 pm

Din

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிஐடியு கிளைச் செயலா் பாலசுப்ரமணியன்.

கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சிஐடியு தொழிற்சங்க வாயில் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் நடைபெற்ற கூட்டத்துக்கு கரூா் கிளைச் செயலா் வி.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். கரூா், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன், பொதுச் செயலா் மாணிக்கம், சிஐடியு மாவட்டத் தலைவா் ஜி. ஜீவானந்தம், செயலா் முருகேசன், துணைத் தலைவா் எம். தண்டபாணி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

அரசு போக்குவரத்துக்கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநரின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்தும், மருத்துவ விடுப்பில் செல்லும் தொழிலாளா்களுக்கு மருத்துவ விடுப்பு இருந்தும் ஈட்டிய விடுப்பைக் கழிக்கும் போக்கைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் திரளாகப் பங்கேற்றனா்.