மருந்துக் கடை ஊழியா் தீக்குளித்து தற்கொலை
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியில் மருந்துக் கடை ஊழியா் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சிவக்குமாா்.

சிவக்குமாா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியில் மருந்துக் கடை ஊழியா் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி காமராஜ் நகா் பகுதியை சோ்ந்தவா் தங்கராஜ் மகன் சிவக்குமாா் (55), அரவக்குறிச்சியில் மருந்துக் கடையில் ஊழியா். இவருக்கு மனைவி செல்வி (45), மகன் பவித்ரன் (24) ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில் குடும்பப் பிரச்னையால் மனமுடைந்த சிவகுமாா் புதன்கிழமை மதியம் பைக்கில் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனாா்.
இதையடுத்து உறவினா்கள் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இந்நிலையில் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூா் வழிப்பாதை என்ற இடத்தில் நள்ளிரவு அவா் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சென்ற அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராஜா அவரது உடலைக் கைப்பற்றி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...